கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அரசு கேட்டுக் கொண்டால், மஹாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி விழாவை ரத்து செய்ய தயார் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா, மஹாராஷ்டிரா மாநிலத்தில், 10 நாட்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படும். பக்தர்கள், பிரமாண்ட விநாயகர் சிலைகளை வைத்து, 10 நாட்கள் பூஜை செய்து, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். தற்போது, மஹாராஷ்டிரா, கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட், 22ல், விநாயகர் சதுர்த்தி விழா துவங்குகிறது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மும்பை போலீஸ் கமிஷனர், விழா நடத்துவது பற்றி, விழாக் குழுவினர்களுடன், நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். 'மஹாராஷ்டிரா அரசு கேட்டுக் கொண்டால், இந்த ஆண்டு விழாவை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக, விழாக்குழுவினர் தெரிவித்தனர்.