இது புதனின் உச்ச வீடாக இருப்பதால்) மெதுவான சுபாவங்களாலும், தங்களது அன்பு கலந்த பேச்சுக்களாலும் மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். பிரசித்தி பெற்ற குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் வாழ்வின் ஒரு பகுதியில் கண்டிப்பாக வறுமையையும், தரித்திரத்தையும் அனுபவிப்பார்கள் என்பது, இந்த ராசியில் பிறந்தவர்களுடைய தலையெழுத்து என்று தான் சொல்ல வேண்டும். எல்லா விதத் தொழில்களிலும் ஞானத்தைப் பெற்று விளங்குவார்கள். தங்களது நிலையை மறந்து பலருக்கு உதவுவதால், வீட்டில் இவர்களுக்கு நல்ல பெயர் இருக்காது தான். இவர்கள் தங்கள் உறவுகளால் பெரும்பாலும் ஏமாற்றப் படலாம், அதனால் சொத்துக்களை கூட இழக்க நேரிடலாம். ஆண்கள் யாரேனும் கன்னி ராசியில் பிறந்து இருந்தால், தாங்கள் பெற்ற ஆண் பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு தரும். ஒருவேளை பெண் பிள்ளைகள் இருப்பின் கவலை வேண்டாம். சுபக்கிரஹ பார்வை இருப்பின் இவர்கள் 70 வயது வரை இருப்பார்கள். கன்னி ராசியில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் பெண்களைக் கவரும் குணத்துடன் இருப்பார்கள் என்பதும் உண்மையே.
2016 ஆம் ஆண்டிற்கான கன்னி ராசியின் பலாபலன்கள்
அன்பார்ந்த கன்னி ராசி நேயர்களே இந்த ஆண்டு எப்படிப் பார்த்தாலும், குருப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லை தான். இருந்தாலும் சனி பகவான் இப்போது உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டு முழுவதுமே அவர் விருச்சிக ராசியில் தான் இருக்கிறார். இதனால் பல நல்ல பலன்களை உங்களுக்குக் கொடுப்பார். உங்கள் முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். எனினும், சனிபகவான் இந்த ஆண்டு முழுவதுமே இது போன்ற நல்ல பலன்களை உங்களுக்குக் கொடுக்க மாட்டார். அதற்குக் காரணம் 28.3.2016 முதல் 14.7.2016 வரை சனி பகவான் வக்கிரம் அடைகிறார். அதன் படி உங்கள் ராசிக்கு நல்ல பலன்களை செய்யும் சனி பகவான் மேற்கண்ட இக்காலத்தில் கெடுவது (வக்கிரம் அடைவது) உங்களுக்கு சாதகமான நன்மைகளைச் செய்யாது. அதனால் இக்கால கட்டத்தில் மட்டும் அதிக கவனமுடன் இருக்கவும். குடும்பத்தில் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் கைகளைக் கடிக்கும்.
அடுத்து 8.1.2016 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ராகு/ கேது பெயர்ச்சியை ஆராயும் போது. இதுவரையில் 7 ஆம் இடத்தில் இருந்து வந்த கேது தற்போது 6 ஆம் இடத்துக்கு வருகிறார். இது உங்களுக்கு மிகவும் சாதகமான அமைப்பு தான். எதிரிகள் விலகி ஓடுவார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பின்தங்கிய நிலைகள் எல்லாம் மறையும். காரியானுகூலம் உண்டு. பொன்னும் பொருளும் உங்களுக்கு வந்து சேரும்.
ஆனால் அதே சமயத்தில் ராகுவின் நிலை உங்களுக்கு சாதகமாக இல்லை. அவர் இக்கால கட்டத்தில் பன்னிரெண்டாம் இடத்திற்கு செல்கிறார். இதனால் குடும்பத்தில் விரயச் செலவுகள் அதிகம் இருக்கும். ஆனால் அனைத்தும் சுபச் செலவுகளாகத் தான் இருக்கும்.
மற்றபடி குரு பகவானின் சஞ்சாரத்தை நோக்கும் போது இந்த ஆண்டின் பெரும் பகுதி அவர் உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் இருக்கிறார். இதனால் உடல் நிலையில் மட்டும் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவும். எப்போதுமே உடலில் ஆயாசம் அதிகம் இருக்கும். அதனால் உற்சாகத்துடன் இருக்க பழகிக் கொள்ளுங்கள். குரு ஜென்மத்தில் இருந்தாலும் அவரது பார்வைகள் உங்கள் ராசிக்கு 5,7, மற்றும் 9 ஆம் இடத்தில் விழுவதால் கணவன் மனைவி ஒற்றுமை சுமூகமாகத் தான் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். புகழ், நன்மதிப்பு கூடும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தந்தை வழியில் வர வேண்டிய சொத்துக்களும் உங்களுக்கு வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகம் பார்ப்பவர்கள் கடந்த காலத்தை விட முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். சிலருக்கு இப்போது இருக்கும் உத்தியோகத்தை விட நல்ல உத்தியோகம் அமையும். மேலதிகாரிகளின் பாராட்டு அதிகம் இருக்கும். சனி வக்கிரம் அடையும் காலத்தில் மட்டும் கவனமாக இருக்கவும் (அக்காலம் மேலே குறிப்பிடப்பட்டு உள்ளது). மற்றபடி எதிர்பார்த்த சம்பள உயர்வு, சலுகைகள் உங்களுக்குக் கிடைக்கும். வேலைப் பளூ குறையும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகள் மற்றும் சொந்தத் தொழில் செய்பவர்கள் மட்டும் கவனமாக இருக்கவும். உங்களைப் பொறுத்தவரையில் முன்பை விட இந்த ஆண்டு அதிகம் ஓடவேண்டி இருக்கும். சிலர் தொழில் நிமித்தமாக அடிக்கடி பிரயாணங்கள் பல மேற்கொள்ள வேண்டி இருக்கும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் அதிகம் இருக்கும். அதனால் தொழில் போட்டியில் திக்கு, முக்காடிப் போவீர்கள். கவனம்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு சிறப்பான பலன்கள் இந்த ஆண்டு உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வயதில் மூத்தவர்கள். குறிப்பாக பெண்களால் அனுகூலம் உண்டு. அரசாங்கத்தால் சிறப்பிக்கப் படுவீர்கள்.
மாணவர்களுக்கு
மாணவர்கள் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கல்வியில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். அதுவரையில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். விரும்பிய பாடம் கிடைக்கும். ஆனால் வருடத்தின் கடைசி ஆறு மாதங்கள் சோதனை நிறைந்து காணப்படும். கவனம்.
விவசாயிகளுக்கு
விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பான பலன்களை செய்யவிருக்கும் ஆண்டு. ஆனால், அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். எனினும் உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டு. அரசாங்க ஆதரவு தக்க சமயத்தில் வந்து சேரும். கடன்கள் குறையும் ஆண்டு. ஆனால் புதிய முயற்ச்சிகள் எதுவும் செய்ய இந்த ஆண்டு உகந்த ஆண்டு அல்ல.
பெண்களுக்கு
பெண்கள் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியைக் காணும் ஆண்டு. கணவன், மனைவி உறவு சுமூகமாக இருக்கும். குடும்பத்தில் சலனங்கள் அதிகம் இருந்தாலும், பாசமும் அதிகரிக்கும் ஆண்டு. பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சனைகள் அகன்று அவர்களாலும் வெற்றிகள் பல உண்டு. உங்களைப் பொருத்தவரையில் சோதனைகளை, சாதனைகள் ஆக மாற்றும் ஆண்டு இந்த ஆண்டு. உடல் நலம் சீராக இருக்கும். சனி வக்கிரம் அடையும் காலத்தில் மட்டும் பொருள் இழப்பு வரலாம். அதனால் அக்கால கட்டத்தில் மட்டும் வீட்டை நன்றாக பூட்டி விட்டுச் செல்லவும். சிலருக்கு வெளியூர் பிரயாணங்கள் ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும்.
பரிகாரம்
ராகுவுக்கு அவசியம் அர்ச்சனை செய்து வாருங்கள். ராகு காலத்தில் துர்கையை அவசியம் பூஜை செய்து வரவும். பைரவருக்கு ராகு காலத்தில் தயிர் சாதம் படைத்து வழிபடலாம்.
பொது
பெயரின் முதல் எழுத்துக்கள் To, Paa, Pee, Poo, Sh, Th, Pe, Po
அவசியம் அணிய வேண்டிய ரத்தினக் கல் மரகதம்
ராசியான எண்கள் அல்லது தேதிகள் 5,14,23,6,15,24
வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்
ராசியான நிறம் பச்சை, வெள்ளை
ராசியான திக்கு வடக்கு, தென்கிழக்கு
ஆகாத நிறம் சிவப்பு
பின் குறிப்பு
இந்த இடத்தில் கொடுக்கப் பட்டுள்ள பலன்கள் யாவும் நன்றாகப் பார்த்துக் கணிக்கப்பட்டது. ஆனால் சிலருக்கு அவர்கள் பிறந்த ஜாதகத்தில் தசாபுத்தி, திசை மோசமாக இருந்தால் மேற்கண்ட நல்ல பலன்கள் (கூடவோ, குறையவோ) ஓரளவு பாதிக்க இடம் முண்டு.மேற்சொன்னவை யாவும் ஒரு,ஒரு ராசியினருக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுப் பலன்களே. தசாபுத்திப் பலன்களையும் ஆராயும் பொழுது உண்மையான பலன்கள், விவரங்கள் கிடைக்கும்.