வேள்வி நடைபெறும் நாள் வருகிற கலி 5118 வைகாசி 8 - ம் தேதி பௌர்ணமி அன்று (2016 may 21)

Tuesday, 19 April 2016

சித்ரா பௌர்ணமி சிறப்பு

சித்ரபுத்திரன்: இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார். இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்ரா பவுர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. சித்திரைக் கதை, சித்திரைக் கஞ்சி எனவும் வழங்கப்படும்.சித்ரா பவுர்ணமி: இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன் - பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.பூஜை: சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்துசித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.பூஜையின் பலன்: சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.கோயில்: இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது. இதே போல் தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டி, கோவை சிங்காநல்லூர் எமதர்மன் கோயில்களிலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ய கடன் வசூலாகும், வாணிபம் சிறக்கும், ஆயுள்பலம் கூடும் என்பது நம்பிக்கை. எமன் தென்திசைக்கு அதிபதி என்பதால் சித்ரா பவுர்ணமி அன்று போடப்படும் கோலங்கள் தென்புற வாசலை அடைப்பது போல் கோலம் போடும் வழக்கம் இன்றும் உள்ளது. சித்ரா பவுர்ணமி மற்ற பவுர்ணமியைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது.இந்திரன் செய்த சித்திரை பூஜை!இறைவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல் இந்திரன் பழி தீர்த்த படலம். ஒரு சமயம் இந்திரன், பிரகஸ்பதியை அவமதித்து விட்டான் அதனால் அவனுக்கு ஆலோசனை கூறுவதை பிரகஸ்பதி நிறுத்தி விட்டார். குருவின் வழிகாட்டுதல் இல்லாததால் இந்திரன் பல தீய செயல்களைச் செய்து வந்தான். இதனைக்கண்ட பிரகஸ்பதி, இந்திரனை மன்னித்து மீண்டும் அவனுக்கு நல்வழிகாட்டத் தொடங்கினார். பிரகஸ்பதி இல்லாத சமயத்தில் தான் செய்த தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய நினைத்த இந்திரன், அவரிடமே யோசனை கேட்க, அவர் தீர்த்த யாத்திரை செல்லும்படி ஆலோசனை கூறினார். அவரின் ஆலோசனைப்படி தீர்த்தயாத்திரை மேற்கொண்ட இந்திரன், ஒரு கடம்பவனத்தை அடைந்தவுடன் தனது தோள்களிலிருந்து பாவச்சுமை அகற்றப்பட்டது போல் உணர்ந்தான். தன் பாவங்கள் விலகியதற்கான காரணத்தை அறிய தேடியவனின் கண்களுக்கு அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பது தெரிந்தது. அங்கிருந்த சுயம்பு மூர்த்திக்கு இந்திரவிமானம் அமைத்து வழிபட்டு தன் பாவத்தை போக்கிக் கொண்டான். இந்திரன் வழிபட்ட அந்நாளே சித்ரா பவுர்ணமி என்றும் கூறுகின்றனர். இந்திரன் வழிபட்ட அந்தப் பகுதியே பின்னர் மதுரை மாநகராயிற்றாம். இன்றும் கூட சித்ராபவுர்ணமி இரவில் தேவேந்திரனே வந்து மதுரை சுந்தரேஸ்வரருக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.மதுரையில் சித்திரை திருவிழா: மதுரையில் திருமலை நாயக்கர் காலத்துக்கு முன் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்திரையிலும், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பங்குனியிலும் நடைபெறும். பங்குனி மாதம் மக்கள் விவசாய வேலையில் ஈடுபடும் காலம். அப்போது மக்கள் கையில் பணப்புழக்கமும் குறைவாக இருக்கும். எனவே மீனாட்சி திருமணத்திற்கும், தேர்த் திருவிழாவுக்கும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அப்போது சைவ-வைணவ பேதமும் இருந்த காலம். எனவே மன்னர் திருமலை நாயக்கர் யோசனை செய்து, பங்குனியில் நடைபெற்ற விழாவை சித்திரைக்கு மாற்றி, கள்ளழகர் விழாவையும் அத்துடன் இணைத்து விட்டார். மன்னரின் உத்தரவை மக்களும் ஏற்றனர். அவர் எண்ணியபடி, மீனாட்சி திருமணம், தேர் விழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாக்களில் மக்கள் கூட்டம் நிரம்பி மதுரை குலுங்கியது. சைவ - வைணவ பேதமும் நீங்கி அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவை இன்றளவும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள வீர அழகர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா மதுரையில் நடைபெறுவதுபோலவே நடைபெறுகிறது. மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது போலவே இங்கும் சித்திரைப் பவுர்ணமி தினத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.தூத்துக்குடி: பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி மாதம்தான் அன்னாபிஷேக விழா நடைபெறும். ஆனால், தூத்துக்குடியிலுள்ள சங்கமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது தனிச்சிறப்பு. மூலவருக்கு மட்டுமின்றி, ஆலயத்திலுள்ள எல்லா சன்னதி மூர்த்தங்களுக்கும் அன்னாபிஷேகம் செய்வர். சித்திரை மாத பிரம்மோற்சவம் பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடக்கும். சித்திரை மாதத்தில் பல்வேறு திருவிழாக்கள் நடக்கின்றன.

வைகாசி விசாகம்

விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும்படும். இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். கருணையங்கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய கொடுமைகளினின்று அவர்களைக் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.
ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப் படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் (சித்தார்த்தன்) அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும், (திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர்.
முருகனின் பிறந்த நாள்: வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர். சிம்மாசலம் என்னும் ஊரில் குன்றின் மேல் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்றுதான் அப்பெருமானைக் காண இயலும். பிறகு சந்தனப் பூச்சு பூசி வைத்து விடுவார்கள். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே நாளன்றுதான். எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான் என்பார்கள். இந்நாளில் எமனுக்குத் தனி பூஜை உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை. வைகாசி விசாகத்தினை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை நடைபெறும். இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். திருமழபாடியில் ஈசன் வைகாசி விசாக நாளில் திருநடனம் புரிகிறார். நம்மாழ்வார் அவதரித்த நாள், வைகாசி விசாகம் என்று ஆழ்வார்திருநகரியில் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.
வசந்த காலம்: உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதாரம் செய்தது வைகாசி மாத அனுஷ நட்சத்திர நாளில்தான். நாயன்மார்களுள் கழற்சிங்கர், சோமாசி மாறர், திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர், முருகநாயனார், நமிநந்தியடிகள் ஆகியோர் அவதரித்ததும் வைகாசி மாதத்தில்தான். பெரிய புராணம் அருளிய சேக்கிழார் சுவாமிகளும் வைணவப் பெரியாரான நம்மாழ்வாரும் அவதரித்தது இந்த மாதத்தில் தான்.
திருத்தணியில் பல தீர்த்தங்கள் உள்ளன. இதில் குமார தீர்த்தமும் ஒன்று. இதில் வைகாசி விசாகத்தன்று நீராடி முருகப் பெருமானை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும்.
முருகப்பெருமான் அருள்பாலிக்கும் தலங்கள்
1. முருகப்பெருமான் வடக்கு திசை நோக்கி தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் தலம் கல்லணையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் திருவிழாவில் 5-ம் நாள் நடைபெறும் தீமிதித் திருவிழா, மிகவும் பிரபலம். பிரமாண்டமான பூக்குழியை பலநூறு பக்தர்கள் ஆவேசம் பொங்க கடந்து செல்லும் காட்சி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.
2. திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள மேலகல்கந்தார் கோட்டையில் உள்ளது பாலமுருகன் ஆலயம். கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் இருக்க, அவருக்கு முன் அன்னை மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் பாலமுருகனுக்கு பாதுகாவலாய் உள்ளாள். அன்னையுடன் அருள்பாலிக்கும் பாலமுருகனை வணங்குவதால், குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
3. லால்குடியிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மணக்கால் சுப்ரமணியசுவாமி கோயில். வைகாசி விசாகம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் நடைபெறும் இந்த ஆலயத் திருவிழாவின் போது அருகிலுள்ள வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சகிதராக இங்கு வந்து சேவை சாதிப்பது ஓர் அபூர்வ நிகழ்ச்சி!
4. சீர்காழிக்கு மேற்கே 4 கி.மீ. யில் கொண்டல் என்ற கிராமத்தில் அருள்பாலிக்கிறார் குமார சுப்ரமணிய சுவாமி. தங்கள் மகளுக்கு மணமாக வேண்டும் என்று எண்ணும் பெற்றோரும் மனம் விரும்பியவரைக் கரம் பிடிக்க விரும்பும் கன்னியரும் இந்த ஆலயம் வந்து முருகனிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
5. திருச்சி-சென்னை நெடுஞ் சாலையில் திருச்சியிலிருந்து 44 கி.மீ.யில் செட்டிகுளம் என்ற தலத்தில் உள்ளது, தண்டாயுதபாணி ஆலயம். குழந்தைப்பேறு வேண்டி இந்த முருகனைப் பிரார்த்திக்கும் தம்பதியர் வேண்டுதல் நிறைவேறியதும் அக்குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்து, பிரார்த்தனையை நிறைவேற்றும் காட்சி உள்ளத்தை சிலிர்க்க வைக்கும்!
6. கோவை காந்திபுரத்திலிருந்து 8 கி.மீ.யில் உள்ளது பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம். கிரகப் பெயர்ச்சி நாட்களில் இந்த ஆலயத்தில் பலவகை மூலிகைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற விசேஷ யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொள்வதால், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்பு கணிசமாக குறைவது கண்கூடு.
7. திருப்பூர்-நம்பியூர் பாதையில் 15கி.மீ. தூரத்தில் உள்ள உதயகிரியில் முத்து வேலாயுத சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள பாறை ஒன்றில் ஐந்து தலை நாகமொன்று புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து நாகதோஷ நிவர்த்தி செய்துகொள்கின்றனர். இவ்வாலயத்திலுள்ள கால பைரவருக்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது. அதுபோலவே சகஸ்ரலிங்கம், பஞ்சலிங்கங்களுக்கும் தனித் தனி விமானங்களுடன் கூடிய சன்னதிகள் அமைந்துள்ளன. ஆலயத்தின் மதிற் சுவர்களில் மீன் இலட்சணைகள் சிற்பங்களாக உள்ளதால் இக்கோயில் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் அமையப் பெற்றதோ எனத் தோன்றுகிறது. ஆலயத்தின் வடபுறம் அழகிய சரவணப் பொய்கையுள்ளது.
8. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோயிலில் ஒரு தனிச் சிறப்பு உள்ளது. கொடிமரத்திலிருந்து வலமாக எல்லாச் சன்னதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம். இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்துத் தருவார்கள். இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் பன்னிரண்டு நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் பன்னிரண்டு திருக்கரங்களாகும்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை. பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப்படுகின்றது.
9. பூனாவில் உள்ள பார்வதிமலை கோயிலில் முருகப்பெருமான் பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டு ஆறுமுகங்களுடன் காட்சி தருகிறார்.
10. திருக்கழுக்குன்றம் மலை மீதுள்ள வேதகிரீசுவரர் ஆலயத்தில் முருகப்பெருமான் ஆறு திருக்கரங்கள் கொண்டு மயில் மீது அமர்ந்த நிலையில் தேவியர் இருவருடன் காட்சி தருகிறார். மயிலின் திருமுகம் வடக்கு நோக்கியுள்ளது. மற்றொரு சன்னதியில் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு, நின்ற கோலத்தில் இருபுறமும் தேவியர் இருக்கக் காட்சி தருகிறார் கந்தன்.
11. சென்னிமலையில் இரண்டு முகங்கள், எட்டு கரங்கள் கொண்டு யாக அக்னியை வளர்க்கும் அக்னி ஜாதகர் என்னும் அரிய திருவுருவத்தில் இருக்கின்றார்.
12. கோவில்பட்டி அருகே உள்ளது கழுகுமலை. இங்குள்ள முருகன் கோயிலிலுள்ள முருகன் ஆறு கரங்களுடன் மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இங்கு முருகனின் இடப்பக்கத்தில் மயில் உள்ளது. ஆலயத்திலுள்ள நூறு தூண்களிலும் ராமர் மற்றும் ஆஞ்சநேயரின் உருவங்கள் காட்சி அளிக்கின்றன.
13. விராலிமலை மூலவர் சண்முகர், மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். இத்தலப் பெருமானுக்கு சுருட்டு நிவேதனம் செய்கிறார்கள்.
14. குழந்தை வடிவில் மயிலுடன் காட்சிதரும் முருகனை, நாகர்கோயிலிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள வெள்ளிமலை மேல் உள்ள கோயிலில் தரிசிக்கலாம்.
15. திருச்செந்தூரில் தியானக் கோலத்தில் காட்சிதரும் முருகன், செம்பனார்கோயிலில் ஜடா மகுடத்துடன் தவக்கோலத்தில் அருள்புரிகிறார்.
16. மானாமதுரையிலுள்ள சிவன் கோயிலில், ஐந்து தலை நாகத்துடன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
17. கனககிரி திருத்தலத்தில் கிளி ஏந்திய நிலையில் காட்சி தரும் முருகப்பெருமான், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.
18. வில். அம்பு ஏந்தி வேட்டைக்குச் செல்வதுபோல் திருவையாறு திருத்தலத்தில் காட்சிதரும் முருகப்பெருமான், கையில் வஜ்ராயுதம் ஏந்திய நிலையில் சுவாமிமலை மற்றும் திருவிடைக்கழி ஆகிய திருத்தலங்களில் அருள்பாலிக்கிறார்.
19. திருமயிலாடி, அனந்தமங்கலம், வில்லுடையான் பட்டு, சாயக்காடு, திருக்கடவூர் மயானம் ஆகிய திருத்தலங்களில் வில்லுடனும் முருகன் காட்சியளிக்கிறார்.
20. கும்பகோணம் அருகிலுள்ள அழகாபுத்தூர் திருத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சி தரும் முருகன், புதுக்கோட்டை அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் திருத்தலத்தில் ஒரு கரத்தில் ஜபமாலையுடனும், சின்முத்திரையுடனும் காட்சி தருகிறார்.
21. கரூர் மாவட்டம் வெங்கமேடு ஆலயத்தில், வேலாயுதமும் தேவியர் இருவரும் இன்றி தனித்து அருள்புரியும் முருகப்பெருமான், திருச்சி உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலில் தனிச் சன்னதியில் ஆவுடையில் நின்ற கோலத்தில் அருளாட்சி புரிகிறார்.
22. கழுகுமலை, கோடியக்கரை, அழகர்கோயில் ஆகிய திருத்தலங்களில் ஒரு முகம் மற்றும் ஆறு கரங்களுடன் திகழும் முருகப்பெருமான், குடந்தையிலுள்ள வியாழ சோமநாதர் ஆலயத்தில், காலில் பாதரட்சையுடன் அருள் தருகிறார்.
23. மருதமலையில் குதிரைமீது அமர்ந்தும், மருங்கூரில் ஆடு வாகனத்தின் மீதும், சென்னை மேற்கு மாம்பலம் முருகாஸ்ரமத்தில் நாகத்தின்மீதும், காங்கேயம் அய்யப்பன் ஆலயத்தில் மீன்மீது நின்றும், திருத்தணி, திருப்பரங்குன்றம், வேலூர், ரத்தினகிரி, பிரான்மலை ஆகிய திருத்தலங்களில் யானையை வாகனமாகக் கொண்டும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
24. தென்காசிக்கு அருகில் உள்ள இலஞ்சி முருகன் கோயிலில் மிக வித்தியாசமாகக் காணிக்கை செலுத்துகிறார்கள் பக்தர்கள். இங்குள்ள முருகப் பெருமானை பிரார்த்திக்கும் அடியவர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதும், மாதுளை முத்துக்களால் ஆன வேல் மற்றும் சேவல் கொடியைக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
25. பழனிமலை முருகப் பெருமானுக்கு தினமும் இரவு திருக்காப்பிடுதல் வைபவம் நிகழும். முன்னதாக ஆண்டவனின் திருமேனியில் சந்தனம் சாற்றப்படும். இந்த சந்தனத்தை மறுநாள் காலையில் பிரசாதமாக தருவார்கள். இந்தப் பிரசாதத்தை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
26. தமிழ்நாட்டில் அறுபடை வீடு முருகனுக்கு இருப்பது போல் இலங்கையிலும் முருகனின் ஆறு கோயில்கள் விசேஷமாகக் கருதப்படுகிறது. இதை முருகனுக்குரிய அறுபடை வீடுகளாக சொல்கின்றனர். கதிர்காமம், நல்லூர் கோயில், மாவிட்டபுரம், கொழும்பு, வில்லூன்றி, மேலைப் புலிவேலி என்பவையே அறுபடை வீடுகளாகப் போற்றப்பெறுகின்றன.
27. ஸ்ரீலங்காவில் உள்ள கதிர்காமம் வரலாற்றுப் புகழ்பெற்ற தலம். கதிர்காம மலையே புனிதமானது. ஸ்வாமி ஜோதி வடிவில் வணங்கப்படுகிறார். இங்கே அருவ வழிபாடு நடைபெறுகிறது. அதாவது, உருவத் திருமேனிகள் இல்லை. சன்னதி திரையால் மூடப்பட்டிருக்கும். உள்ளே சடாட்சர மந்திர வடிவாக அமைக்கப்பட்ட இயந்திரம் உள்ளதாகக் கூறுவர். முருகனுக்கு பூஜை புரிபவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மவுனமாய் பூஜிப்பதே வழக்கம்.
28. தமிழ்நாட்டில் கடலூர் அருகில் உள்ள திருமாணிக்குழி சிவன் கோயிலிலும் இப்படி திரைக்குப் பின் பூஜை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
29. பொன்னேரிக்கு அருகில் பெரும்பேடு என்ற தலத்தில் முருகப் பெருமான் ஆறரை அடி உயரத்தில் காட்சி தருகிறார். இடதுபுறம் உள்ள தெய்வானை கிரீடத்துடனும், வலதுபுறம் உள்ள வள்ளி, குறத்திக் கொண்டையுடன் நிற்கிறார்கள். அற்புதமான அமைப்பு இது.
30. திருத்தணி முருகனின் மார்புப் பகுதியில் ஒரு குழி இருப்பதை அபிஷேக நேரங்களில் காணலாம். தாரகாசுரனால் ஏவப்பட்ட சக்கரத்தை தன் மார்பில் ஏந்தி அங்கேயே பதித்துக் கொண்டதாகவும், பிறகு தம்மைத் திருமால் வேண்டி பூஜித்தபோது மார்பிலிருந்த சக்கரத்தை திருமாலுக்கு முருகன் வழங்கியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அதனால்தான் மார்பில் பள்ளமாகக் காட்சி தருகிறது.
31. கரூர் அருகேயுள்ள திருத்தலம் வெண்ணெய் மலை. இங்கு வேல், மயில் இல்லாமலும், வள்ளி - தெய்வானை தேவியர் இல்லாமலும் தனித்துக் காட்சி தருகிறார் முருகப்பெருமான்.
32. அசுர சேனைகளை அழித்தொழித்த முருகப் பெருமான், அவர்களை மூன்று இடங்களில் எதிர்கொண்டாராம். அவை, நீரில் போர்புரிந்த இடம் - திருச்செந்தூர்; நிலத்தில் போர் புரிந்த இடம் - திருப்பரங்குன்றம்; இறுதியாக விண்ணிலே போர் புரிந்த இடம் - திருப்போரூர்.
33. சென்னை - குன்றத்தூர் முருகன் கோயிலில், தம்பதி சமேதராக திகழும் சுப்ரமணிய சுவாமியை தரிசிக்கலாம். இந்தக் கோயிலின் கருவறை வித்தியாசமாக அமைந்துள்ளது. ஆம்... கருவறையில் அருள்பாலிக்கும் முருகன். வள்ளி - தெய்வானை ஆகியோரை ஒன்றாகத் தரிசனம் செய்ய முடியாது. சன்னதிக்கு நேராக நின்று பார்க்கும்போது முருகப்பெருமானும், ஒருபுறம் நகர்ந்து பார்க்கும்போது வள்ளியும், மறுபுறம் நகர்ந்தால் தெய்வானையும் தெரிவார்கள்.
34. திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை முருகப் பெருமான் திருமணம் செய்துகொண்டு திரும்பும் வழியில் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள செஞ்சேரி மலையில் தங்கியதாகக் கூறப்படுகிறது. இத்தலத்து மூலவர் ஆறு திருக்கரங்களுடன் காட்சியளிப்பது சிறப்பான ஒன்றாகும்.
பன்னிரு கரங்களின் பணி: முருகனின் பன்னிரு கரங்கள் செய்யும் பணிகள் என்னவென்று தெரியுமா? இரு கைகள் தேவரையும் முனிவரையும் காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் இருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அருள்பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கின்றது. பத்தாவது கை மணியை ஒலிக்கின்றது (அருளோசை). பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.

Tuesday, 19 January 2016

நன்மை தரும் அனுமன் மந்திரம் ......
     இறைதன்மை கொண்டுள்ள யாரும் வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் உச்சரிக்கலம். 1008 தடவை உச்சரித்தால் போதும், அதன் வரிகள் உங்கள் மனதில் பதிந்து விடும். ஆஞ்சநேயரை பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்களை பற்றி அறிந்து கொண்டு தொடர்ந்து மந்திரத்தை உச்சரிக்கவும். ஆஞ்சநேயர் மந்திரஙததை 108 தடவை உச்சரித்து விட்டு எங்கு சென்றலும் அது நன்மையாக இருக்கும் நினைத்தது நடக்கும்.


   இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருவேலையில் அனுமன் தீவிரமாக இருந்த போது வந்தார் சனி பகவான்.

        "ஆஞ்சநேயா உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்" என்றார்.

         "கடமையைச் செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்" என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம்தாங்காமல் சனிபகவான் அலறினார். "சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்" என்றார் அனுமன்.

        அதன் பிறகே இறக்கிவிட்டார். "ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை" என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.

          அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால், சனிஸ்வரனின் பாதிப்புக்களில் இருற்து விடுபடலாம்..

          செல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ராமபிரானின் உதவியாளராகிய அனுமனும் மந்திரம் மிகவும் சிறப்பு.

மூலமந்திரத்தை இலட்சத்தெட்டு உரு ஜெபித்துக் கொண்டு வந்தால் அனுமன்
அருள் கிடைக்கும்

"ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமுகி ஹனுமதே, லம் லம் லம் லம் கைல ஸம்பத் கராய ஸ்வாஹா"

ஆஞ்சநேயர் யார் ?
    வைஷ்ணவ சம்பிரதாயத்தில் கருடாழ்வாரை பெரிய திருவடி என்று அழைப்பார்கள் அதே போலவே ஆஞ்சநேயருக்கும் சிறிய திருவடி என்ற சிறப்பு பட்டம் உண்டு ராம அவதாரத்தில் பகவானுக்கு தொண்டு செய்து தாசானுதாசனாக வாழ்ந்ததனால் இந்த சிறப்பை அனுமன் பெறுகிறார்

               அத்தகைய அனுமன் சிவ அம்சம் பொருந்தியவர் என்பது அதியசயமான உண்மையாகும் திரேதா யுகத்தில் குஞ்சரன் என்ற மகாசிவபக்தன் வாழ்ந்தான் அவனுக்கு வெகுநாட்களாக குழந்தைகள் இல்லை குழந்தைவரம் வேண்டி அதுவும் ஆண் குழந்தை வேண்டுமென்று சிவபெருமானை நோக்கி அவன் கடுதவம் மேற்கொண்டான்

         குஞ்சரனின் தவத்தை மெச்சிய கைலாச நாதன் அவன் முன்னால் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் தனக்கு அழகான ஆண்குழந்தை வேண்டுமென்று அவன் சொன்னான் அதற்கு சிவபெருமான் உனது கர்மப்படி ஆண்குழந்தை பெறுகின்ற பாக்கியம் உனக்கில்லை ஆனால் மகாபதிவிரதையாக ஒரு மகளை பெறுவாய் அவள் மூலம் என் அம்சத்தில் உனக்கொரு பேரன் பிறப்பான் என்று வரம் கொடுத்தாராம்

              குஞ்சரன் மிகவும் சந்தோசபட்டான் குழந்தை இல்லையே என்று வருந்துவதை விட பிள்ளை கலி தீர்க்க பெண் குழந்தையாவது பிறக்கட்டுமென்று தவத்தை முடித்து வீட்டுக்கு போனான் அவனுக்கு சில நாளில் அஞ்சனா என்ற அழகான மகள் பிறந்தாள்

     கன்னிபருவம்' எய்திய அஞ்சனா தேவி கேசரி என்ற வானர வீரனை காந்தர்வ முறையில் மணம் முடித்தாள் அஞ்சானா தேவி முன் குறத்தி வடிவாக வந்த தர்மதேவதை திருவேங்கட மலைக்கு சென்று தவம் செய் அதன் பயனாக தேஜசும் வீரியமும் நிறைந்த மகன் பிறப்பான் என்று சொன்னாள்

                அஞ்சனா தேவியும் திருமலை சென்று தனது தவத்தை துவங்கினாள் பக்தி சிரத்தையோடு அவள் செய்த தவம் வாய்வு பகவானுக்கு மிகவும் பிடித்துவிட்டது அவள் தவத்திற்கு தன்னால் முடிந்த உதவி செய்யவேண்டும் என்று விரும்பி தினசரி ஒரு பழத்தை அவள் அறியாமல் அவள் முன்னால் வைத்து போனான் ஒருநாள் சிவபூஜைக்காக வைத்திருந்த பழம் ஒன்றை எடுத்து அவள் இருந்த இடத்தில் வைத்து விட்டான்

     கண்விழித்து பார்த்த அஞ்சானா தேவி தன்முன்னால் இருந்த பழத்தை வணங்கி சாப்பிட்டாள் அப்போதே அவள் கர்பவதியானாள் சிவனுக்கான பழம் என்பதனால் சிவ அம்சத்தோடும் வாயு பகவான் அதை கொடுத்ததினால் வாயு புத்திரனாகவும் அஞ்சனா தேவிக்கு பிறந்த அனுமான் கருதபடுகிறார்

       எனவே ஆஞ்சநேயர் சைவ வைஷ்ணவ ஒற்றுமை சின்னம் என்றே கருததக்கவர் ஆவார் அவரை பக்தியோடு வணங்கினால் பக்தர்கள் வேண்டி விரும்பி கேட்கும் நியாயமான கோரிக்கைகள் எதை வேண்டுமென்றாலும் நிறைவேற்றி வைப்பார்

Saturday, 16 January 2016

சொர்ண சுரபி மந்திர தீட்சை - 2


வெற்றி தோல்விகளையும், சாதனை வேதனைகளையும் கண்டு , மயங்கி விடாத இருத்தல் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் போராட்டத்துக்கும் பக்க பலமாக பெரும் உதவியாக இருக்கும் இந்த செல்வ வசிய மந்திர தீட்சை.


 எதிர்பாராத ஏற்றங்களும் இறக்கங்களும் வளைவுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். 

                              


 நாட்டையே மாற்ற வழி செய்யும் அற்புத நெல்லிக்கனி.

                                                        

                        வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.

            தினம் பூஜைக்கு ஒரு நெல்லிக்கனி வைத்து விட்டு அதை மந்திரம் உச்சரித்த பிறகு நெல்லிக்கனிய சப்பிட வேண்டும்.

                                        

திங்கள்க்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு பூஜை அறையில் தியானம் நிலையில் (அதவது)

                                            

நெய் விட்டு ஐந்துதிரிப் போட்டு தினம் விளக்கு எற்ற வேண்டும்..


சகல கஷ்டங்களை விலகும் லக்ஷ்மி கடாக்ஷ கெளரி தேவி மந்திரம்.

குறைந்தது 3 மாத காலம் மந்திரம் உச்சரிக்க வேண்டும்.


தீட்சை பெற்ற மந்திரத்துர்க்கு முன்னால் இந்த மந்திரத்தை தெளிவாக உச்சரிக்க வேண்டும்.


"வஸீப்ரதா வாஸீதேவீ வாஸீதேவ மநோஹரீ வாஸவார்சித பாதச்ரீ : வாஸவாரி விநாசிநீ " 12 தடவை.

காலை 5 மணி முதல் 9 மணி வரை 108 தடவையும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை 64 தடவையும் உச்சரிக்க வேண்டும்.


       மாமிசம் உண்டால் 9 மணி நேரத்துர்க்கு பிறகு மந்திரம் உச்சரிக்க வேண்டும்


         பின்குறிப்பு : நேரில் வருபவர்கள் மட்டும் முன் அனுமதி பெறவேண்டும். 

மந்திர தீட்சை பெற்றுக் கொள்ள, இதற்கான கட்டணம் எதுவுமில்லைஉங்களால் முடிந்த தட்க்ஷிணைபோதுமானது.

          மந்திர தீட்சை செய்யாமல் இருந்தால் மந்திரம் பலிக்காமல் போய் விடும். மந்திரம் மனதில் பதிந்த பிறகு மந்திரம் எழுதிய காகிதத்தை ஓடும் தண்ணீரில் விடவும், மந்திரத்தை பிறருக்கு சொல்ல கூடாது. தவறி சொன்னால் மந்திரம் பலிக்காது.


                                       மந்திர தீட்சைக்கு Click Here

ஷேர் மார்க்கெட்டில் இப்பெழுது Bank Nifty


Thursday, 14 January 2016

பொங்கல் பண்டிகை அன்று சூரியனை ?

பொங்கல் பண்டிகை' என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம்.
போகி பண்டிகை
"போகி'யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை 
கொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.
ஆனால் இப்போதெல்லாம் போகியன்று "டயர்'களைக் கொளுத்தும் மூடத்தனம், பரவலாக நடக்கின்றது. இதனால் வளி மண்டலம் மாசு படுவதோடு, மனிதர்களுக்கு நோயும் உண்டாகின்றன. ஏற்கெனவே சுவாசக் கோளாறு உள்ளவர்கள், டயர்கள் வெளியிடும் நச்சுப் புகையால் மேலும் பாதிப்புக்குள்ளாவார்கள். என்னதான் காவல் துறையினர் எச்சரித்தாலும், வீட்டுக்கு ஒரு காவலரையா நிறுத்த முடியும்? எனவே நாமே சமுதாயக் கட்டுப்பாடோடும், அறிவியல் விழிப்புணர்வோடும் இருந்து, நோய்கள் தரும் டயர் கொளுத்தும் வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
பொங்கல் பண்டிகை

ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.
பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, "பொங்கலோ பொங்கல்' என்று கூறி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.
நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம். ஆயினும் "பால்கனி'யிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள்; தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனம் செய்வார்கள். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. கிராமங்களில் தீபாவளிக்கு புத்தாடை வாங்காது போயினும், பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையே அணிவார்கள். நகரங்களில் ஏனோ தீபாவளியின் இடத்தை பொங்கல் பண்டிகை பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அது சரி, "மாடுகளை மேய்க்க மந்தைவெளி இங்கு இல்லையே' என்ற பாடல் வரிகள் கூறுவதும் நியாயம்தானே?
எது எப்படியோ... பொங்கல் பண்டிகை தரும் மகிழ்ச்சி, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பொதுவானதே!
மாட்டுப் பொங்கல்

கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. "ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்' என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. "ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது' என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.
அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.
மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.
காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, "வீர நடை' நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு "அங்க வஸ்திரம்' போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே! ஆனால் அக்காளைகளுக்கு செயற்கையான முறைகளில் வெறியூட்டுவது தவறு. தக்க மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்று, அதன் வீரத்தை வளர்ப்பதே விவேகமான செயலாகும்.
திருவள்ளுவர் தினம்
மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றது. நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார்.
திருக்குறளில் சொல்லப்படாத விஷயமே இல்லை.
"உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை' என்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர். நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லை. திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்தலே உண்மையான "வள்ளுவ பூஜை'யாகும். இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
video
காணும்பொங்கல்
பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது "கனு' பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.
"காணும் பொங்கலும்' இந்த நன்னாளே! அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடிருந்தது. இன்றைய "சீரியல்' உலகில், வீட்டுக்கு வரும் சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பதுகூட அரிதாகிவிட்டது. இந்த அவல நிலையை மாற்ற இந்தக் காணும் பொங்கல் நாளில் சபதமேற்போம்!
வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்! ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், "சூரிதயனை' கண்ட பனிபோல விலகட்டும்! அதற்கு அந்த ஆதவனே நல்வழி காட்டட்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!

Wednesday, 13 January 2016

நமது கோமாதாவின் நிலை என்ன ?......ததமிழர்களின் வீரவிளையாட்டிற்கு தடை......
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கில்லாடி  தனமாக உள்ளது.

இரக்கமே இல்லாமல் துடிக்க துடிக்க கொன்று வெளிநாடுகளுக்கு  
மாடுகளை ஏற்றுமதி மட்டும் செய்யலாம்......
இந்திய அரசே துணை நிற்பதால் இது மிருகவதை ஆகாது போல .......

ஜல்லிக்கட்டு எதிர்ப்புஏன்?
சர்க்கரை நோய்இந்தியாவில் ஜெர்சி பால் மூலமே பரப்பப்பட்டது.
Diabetic cause cow milk என்றுகூகுளில் அடியுங்கள்உண்மை விளங்கும்.

வருடத்திற்கு சர்க்கரைநோய் மருந்து விற்பனைமட்டும் அமெரிக்க
நிருவனங்களுக்கு 375 லட்சம் கோடி அமெரிக்க அடிமைகள் ஏன்
துடிக்கிறார்கள்?  நாட்டு பசும்பால் சர்க்கரைஉட்பட பல நோயை
தடுக்கிறதுஜல்லிக்கட்டு காளையை அழித்தால்அயல் விந்து ஊசி
மூலம்நாட்டு பசுவைஅழிக்கலாம் இப்போது புறிகிறதா?

        முதல் அமெரிக்க NGO வரை மேலைநாடுகள் எல்லாம்  சேர்ந்து
எதிர்க்கும் ரகசியம். பத்து ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு எதிர்த்து
நூறு நாடுகள் போராடும் ரகசியம்.....

Thursday, 31 December 2015

2016 - ஆம் வருடம் இந்தியா எப்படி இருக்கும் ...........2016 - ம் ராசி பலன் சில ........

    கூட்டு தொகை 9 வருவதால் எல்லா நாடுகளை விடவும் பண பரிமாற்றம் வளர்ச்சி மிக சிறப்பாக இருக்கும்.

         சில நாடுகள் எதிரியாக மாறும்.

எதிரி நாடுகள் நட்பு நாடுகளாக மாறும்.

       நமது நாட்டிற்கு சில துறைகளில் நஷ்டம் ஏற்படலாம்.

        இந்தியா வல்லரசு ஆக 3 முதல் 5 வருடம் ஆகும்.

நமது நாட்டின் வளர்ச்சிக்கு தடை இருந்து வந்த தடைகள் 3 முதல் 5 அரை மாதத்திற்கு சரியாகும்.

      கடந்த ஆண்டில் பல துறைகளில் வளர்ச்சியில் முதல் இடத்தை பிடித்த பெண்கள் அதே இடத்தை தக்க வைப்பார்கள்.

         நமது நாடு பல துறைகளில் பின்தங்கி வந்த இடத்தில் இருந்து Top 10 இடத்திற்கு 6 முதல் 9 மாதத்திற்க்குள் வர வாய்ப்பு உள்ளது.

         ஷேர் மார்க்கெட்டில் ஏற்றம் காண வாய்ப்பு மிகவும் குறைவு, காரணம் ரூபாய்யில் சின்னம் இறங்கு முகமாக இருப்பதால்.

        இந்த வருடம் நாட்டு மக்களுக்கு பொதுவாக மிக சிறப்பாக இருக்கும், ஆனால் சில இடங்களில் பெரிதாக சிறிதாக அழிவு வர வாய்ப்பு உள்ளது.

        மேல நாட்டு உறவுகள் மேலும் அதிகரிக்கும்.

நமது நாட்டில் உள்ள சில இடங்கள் எடுத்து வைத்து உள்ள நாடுகள், தானாக திரும்ப கிடைத்து விடும்.
Monday, 28 December 2015

இந்தியா ஓரங்கட்டுகிறது அமெரிக்காவை, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் மூலம் ......அமெரிக்காவின் ஜி.பி.எஸ்ஸை ஓரங்கட்டும் இந்தியாவின் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்

நம்ம நாட்டில் தற்பொழுது யூபிஎஸ் பற்றி தெரிந்திருக்கிறார்களோ இல்லையோ, ஜிபிஎஸ் பற்றியும் அதன் செயல்பாடுகளையும் தெரிந்து வைத்துள்ளார்கள். Global positioning system என்று சொல்லப்படும் இந்த ஜிபிஎஸ்ஸை அமெரிக்கா தன்னுடைய ராணுவ துருப்புகளின் இடம் பெயர்தலை செயற்கை கோள்கள் மூலம் கண்காணிக்க 1973 முதல் இந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கினர்.

செயற்கைகோள் உதவியுடன், பூமியைக் கண்காணிக்கும் இந்த தொழில்நுட்பம் முதலில் ராணுவம், கப்பற்படை போன்ற தேச பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தப் பட்டது. 90-களில் பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் அதனை மாற்றியது அமெரிக்கா. நம் இந்தியாவில் பயன்படுத்தும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பமும் அமெரிக்காவின் தொழில்நுட்பமே.

அதை மாற்றும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, IRNSS எனும் Indian Regional Navigation Satelite System என்னும் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது.
இந்த தொழில்நுட்பத்தை ஜி.பி.எஸ்-க்கு மாற்றாக கார், கப்பல்கள், மொபைல் போன்கள் என எல்லா இடத்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மொத்தம் ஏழு செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் இந்த இந்திய தொழில்நுட்பத்திற்காக இதுவரை 4 செயற்கைகோள்கள், IRNSS-1A, IRNSS-1B, IRNSS-1C, IRNSS-1D ஆகியவை ஏற்கனவே விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.மீதி மூன்று செயற்கைக் கோள் களும் விரைவில் அனுப்பப்பட்டு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் என்கிறது இஸ்ரோ.

இந்தியாவுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இதில் ஜி.பி.எஸ்-ஐ விட துல்லியமான தகவல்கள் பெறமுடியும். IRNSS தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்துவதன் மூலம், சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பை பயன்படுத்தும் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா,சீனாவுக்கு அடுத்து இந்தியாவும் சொந்த நேவிகேஷன் அமைப்பைப் பயன்படுத்தவுள்ளது.